×

இங்கிலாந்து 294 ரன்னுக்கு ஆல்அவுட் தடுமாற்றத்துடன் தொடங்கிய ஆஸி.

லண்டன்: ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவும் தடுமாற்றதுடன் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும்  ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு ெசய்தது. அதனால் களமிறங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 82 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்திருந்தது.  ஜாக் லிச் 10 ரன்னுடனும், ஜோஸ் பட்லர் 64 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. கூடுதலாக 6 ரன் சேர்த்த பட்லர் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜாக்கும் ஆட்டமிழக்க,  இங்கிலாந்து  87.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 294 ரன் எடுத்தது. அப்போது ஸ்டூவர்ட் போர்ட் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 5, பேட் கம்மினஸ் 3, ஜோஷ் ஹசல்வுட் 2 விக்கெட்களையும் கைபற்றினர்.

அடுத்து விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலியாவும் தடுமாற்றத்துடன் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ேடவிட் வார்னர் 5 ரன்னிலும், மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்னிலும் ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தால் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தது இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் இந்த உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் மார்னஸ், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர்.  அரை சதம் அடிக்க ஆவலுடன் இருந்த மார்சனசை 48 ரன்னில்(10 பவுண்டரி) ஆட்டமிழக்க  செய்தார் ஆர்ச்சர். பின்னர் ஸ்மித்துடன், மாத்யூ வாடே  ஜோடி சேர்ந்து விளையாடினார்.

Tags : Aussie ,England , all-out duck, England's 294 runs.
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்