×

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

* இலங்கை பிரதமரிடம் கனிமொழி எம்பி வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார். திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர், இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்து பேசினர். அப்போது கனிமொழி எம்பி, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்க்க வேண்டும். அதே நேரம், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக கனிமொழி எம்பி, இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியை சந்தித்து பேசினார்.

Tags : fishermen , Action should be taken, loosen the current stringent laws, address the fishermen's problem
× RELATED இலங்கை சிறையிலிருந்து...