×

வடகிழக்கு தலைவர்கள், காங். முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி: வடகிழக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள்,  காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் டெல்லியில் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று டெல்லியில் வடகிழக்கு மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் கட்சியின் வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பு செயலாளர் லூசிங்கோ பெலேரோ ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்டோரும் கலந்து ெகாண்டனர். கூட்டத்துக்கு பின் வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பு செயலாளர் ெபலேரோ அளித்த பேட்டியில், ‘‘சோனியா காந்தியுடன் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில், வடகிழக்கு மாநிலங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், வடகிழக்கு ஒத்துழைப்பு கமிட்டியை வலுப்படுத்துவது, கவுகாத்தியில் நிரந்தர அலுவலகம் அமைப்பது குறித்து விவாதித்தோம்.  அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது,’’ என்றார்.

தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை சோனியா சந்தித்து பேசினார். இதில், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டனர்.

‘முழு படத்தையும் பார்க்க விரும்பவில்லை’

பிரதமர் மோடி நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் பேசியபோது, ‘பாஜ அரசின் 100 நாள் சாதனை என்பது ஒரு டிரைலர்தான்.  முழுப் படத்தையும் நீங்கள் விரைவில் காண்பீர்கள்,’ என குறிப்பிட்டார். இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமரின் 100 நாள் டிரெய்லரில் ஜிடிபி 5 சதவீதம் குறைந்துள்ளது, கடந்தாண்டு 22 சதவீதமாக இருந்த வரி வசூல் ஒரு சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து, 10வது மாதமாக வாகன விற்பனை சரிந்துள்ளது. ஜிஎஸ்டி வசூல், முதலீடு குறைந்துள்ளது.  வேலையில்லா திண்டாட்டம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவையே மோடியின் சாதனைகள். எனவே, மீதமுள்ள படத்தை பார்க்க நாங்கள் விரும்பவில்லை,’ என கூறியுள்ளார்.

Tags : Northeastern Leaders ,Sonia , Northeastern Leaders, Cong. Sonia consulting ,CM
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...