×

குறைந்த தூரத்தில் தரையிறங்கும் சோதனையில் ‘தேஜஸ்’ வெற்றி

புதுடெல்லி: விமானம் தாங்கி கப்பல்களில் தரையிறங்கும் சோதனையை தேஜஸ் போர் விமானம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனம்‘ தேஜஸ்’ என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்துள்ளது. இது, விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கடற்படையிலும்  பயன்படுத்த  முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேஜஸ் விமானத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. விமானம் தாங்கி போர் கப்பல்களில் தரையிறங்கும் போது, குறைந்த தூரத்தில் தரையிறக்க வேண்டும்.

இதற்காக, இந்த விமானத்தின் பின் பகுதியில் ஒரு கொக்கி பொருத்தப்படும். கப்பலில் தரையிறக்கும்போது, இந்த கொக்கி கப்பலின் தரைப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் 3 இரும்பு கயிறுகளில் ஏதாவது ஒன்றில் சிக்கி நிற்கும். அப்படி நிற்கவில்லை என்றால், அந்த விமானம் மீண்டும் மேலே பறந்து சென்று அடுத்த முயற்சியில் தரையிறங்க வேண்டும். இந்த சோதனை கோவா கடற்கரையில் உள்ள கடற்படை தளத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. குறைந்த தூரத்தில் தரையிறங்கும் சோதனையை தேஜஸ் வெற்றிகரமாக முடித்தது. 


Tags : Tejas ,win , Tejas's telecommunication triumph ,short distance landing test
× RELATED ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து