×

பிரதமர் மோடி- சீன அதிபர் மாமல்லபுரம் வருகை பாதுகாப்பு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: இந்தியா-சீனா இடையிலான உறவுகளை மேம்படுத்த பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி சீனா சென்றார். அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து, இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, சீன அதிபர் அடுத்த மாதம் அக்டோபர் 11ம் தேதி முதல் 13ம் தேதிக்குள் இந்தியா வருவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,  சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களையும் சந்திக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீன அதிபர் இந்தியா வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லியில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அதன் ஒருகட்டமாக, சீன அதிபர் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் வந்தால் இரு நாட்டு தலைவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நேற்று காலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்ஜன் மார்டி, டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் டெல்லியில் உள்ள பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில், மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் இடம், தங்கும் இடம் பற்றி மத்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசுடன் விவாதித்தனர்.

Tags : Chief Secretary ,visit ,Chinese ,President ,Mamallapuram , PM Modi, Chinese President, Mamallapuram, Chief Secretary
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...