×

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை:  தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக வெயில் நீடித்து வருகிறது. அதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. கரூரில் அதிகபட்சமாக நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது. பாளையங்கோட்டை 99 டிகிரி, சேலம், திருத்தணி 93 டிகிரி, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சென்னை 95 டிகிரி வெயில் நிலவியது.நேற்று வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி கடலோரத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக தேவாலா, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, வேலூர் 70 மிமீ பெய்துள்ளது.

சோளிங்கர், காஞ்சிபுரம் 60 மிமீ, அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், செந்துறை, செங்கம் 50 மிமீ, விரிஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காவேரிப்பாக்கம், போளூர் 40 மிமீ மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் நீடிப்பதால் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


Tags : districts , Heavy rains, 8 districts
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை