×

வேலூரில் 3.36 லட்சம் பறிமுதல் பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு: லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல்

வேலூர்: வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 3.36 லட்சம் சிக்கியது தொடர்பாக இணைப்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து  லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம்  மாலை 6 மணியளவில் வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தனர்.  பத்திரப்பதிவு இணை பதிவாளர் சிவலிங்கம் அறையில் உள்ள அவரது மேஜை மற்றும் அலுவலகத்தில் உள்ள பீரோ, கோப்புகள், கழிவறை உட்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ₹3.36 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நடந்தது.

தொடர்ந்து பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் சிவலிங்கம் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக இணை சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.  மேலும் இதுதொடர்பான அறிக்கை பத்திரப்பதிவு துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



Tags : Vellore , Vellore, Associate Dean of Records, Prosecution, Bribery and Cops
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...