நவம்பரில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் தேர்வு

கோவை: கோவை மாவட்ட பாஜ அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அமைப்பு தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  நவம்பர் முதல் வாரத்தில் மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு இடையே மாநில தலைவர் அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.  மாநில தலைவர் இல்லை என்றாலும் கட்சி பணிகளில் எந்த சுணக்கமும் இல்லை. மாநில தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கும் பட்டியலில் 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.  இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.


Tags : Tamil Nadu ,BJP , BJP elected new leader
× RELATED வரும் 30-ம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா