×

நாகையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக 28 வழக்குகள் பதிவு, பரமக்குடியில் 30 பேர் மீது வழக்குப்பதிவு

நாகை: நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 250க்கு மேற்பட்ட இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை காவல்துறையினர் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்ததாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியில் செப்டம்பர் 11ல் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்- ஐ வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் எம்.பி காஞ்சிபுரம் பன்னீர்செல்வம் இல்லத் திருமண விழாவுக்கு வரும் ஓ.பி.எஸ்- ஐ வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக வாசலில் வைக்கப்பட்டுள்ள பேனர் கூட ஐகோர்ட் உத்தரவுக்கு பிறகும் அகற்றப்படவில்லை. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை நெடுகிலும் திருமண மண்டபம் வரை அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் தவிப்புக்குள்ளாகினர்.

Tags : Naga ,Paramakudi , Nagai, banner, case record
× RELATED நாகையில் போக்குவரத்து மாற்றம்