×

கர்நாடக அணைகளில் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடும் நீரின் அளவு குறைப்பு

சேலம்: காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடும் நீரின் அளவை கர்நாடக அரசு குறைத்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 13,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதே நேரத்தில் கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பை தமிழக அரசு முற்றிலுமாக நிறுத்தி உள்ளது.

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு கடந்த சில நாட்களாக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இப்போது திறக்கப்படும் நீரின் அளவை வினாடிக்கு 13,000 கனஅடியாக கர்நாடக அரசு குறைந்துள்ளது. அந்த மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம், அதன் உச்சபட்ச நீர்தேக்கும் அளவான 124.80 அடிக்கு உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 14225 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 12000 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே போன்று 84 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் கபினி அணையின் நீர்மட்டம் 83.76 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7888 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

120 அடியை உச்சபட்ச நீர்தேக்கும் அளவாக கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21,000 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 25,900 கன அடி வீதமும், கால்வாய்களில் 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 31,500 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30,000 கன அடி வீதமும், கால்வாய்களில் 1500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் மும்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரியில் வினாடிக்கு 9548 கன அடி வீதமும், வெண்ணாறில் இருந்து 9022 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 11,597 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் வினாடிக்கு 3004 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Karnataka Dam , Cauvery, Karnataka Dam
× RELATED கர்நாடக அணைகளிலிருந்து காவிரி...