×

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு ஒரே தாள் தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட இயக்குனர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு ஒரே தாள் தேர்வு

சென்னை: பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மொழி / ஆங்கிலம் இருதாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. மொழிப்பாடத்தில் தமிழ் தாள் 1, தமிழ் தாள் 2, ஆங்கிலம் தாள் 1, தாள் 2 என்ற வகையில் தேர்வுகள் நடைபெறாது.

தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மாணவர்களுக்கு இருக்கக்கூடிய அழுத்தத்தை குறைக்க கூடிய வகையிலும், அதேபோல ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்துவதற்கு கால அவகாசம் எடுத்து கொள்வதாலும், அந்த இரண்டு தாள்கள் என்ற முறை ஒழிக்கபப்ட்டு ஒரே தாள் என்று மாற்றப்படுவதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தாள் 1, தாள் 2 என்ற முறை இருந்து வந்தது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே ஒரு தாள் முறையே பின்பற்றப்படுகிறது. அதேபோல தற்போது 10ஆம் வகுப்புக்கும் ஒரே தாள் முறை என்று மாற்றப்பட்டுள்ளது.

Tags : Elections ,Tamil Nadu Government Announces , sslc, public exam, language papers
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு