×

காஞ்சிபுரத்திலும் அதிமுக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் - ஐ வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சர்ச்சை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலும் அதிமுக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் - ஐ வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் எம்.பி காஞ்சிபுரம் பன்னீர்செல்வம் இல்லத் திருமண விழாவுக்கு வரும் ஓ.பி.எஸ் - ஐ வரவேற்று அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக வாசலில் வைக்கப்பட்டுள்ள பேனர் கூட ஐகோர்ட் உத்தரவுக்கு பிறகும் அகற்றப்படவில்லை. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை நெடுகிலும் திருமண மண்டபம் வரை அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் தவிப்புக்குள்ளாகினர்.  


Tags : Deputy Chief Minister ,Kanchipuram , Kanchi, Deputy Chief Minister OPS, welcome, banner, controversy
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...