×

நெல்லையில் 2 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 2 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு அண்ணாநகர் பகுதியில் விவசாயி ராமர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான ஆடு ஒன்றை இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று தூக்கி செல்லும் காட்சி அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை தொடர்ந்து ராமர் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டதோடு சிறுத்தையை பிடிப்பதற்காக அண்ணாநகர் ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கூண்டுகளை வைத்து சென்றனர்.

வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஆட்டினை உண்பதற்காக சென்ற 3 வயது பெண்சிறுத்தை வசமாக சிக்கியது. சம்பவம் குறித்து அறிந்து வந்த வனத்துறை குழு சிறுத்தையை மீட்டு முதலுதவி அளித்து அடர் வனப்பகுதிக்குள் கொண்டு செல்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் இப்பகுதியில் கரடி ஒன்றும் உலவி வருவதாகவும், அதனையும் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : civilians , Nellai, leopard, caught
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை