×

தேனியில் களைகட்டும் கொடைக்கானல் நட்சத்திரப்பழம்

தேனி  : கொடைக்கானலில் விளையும் நட்சத்திரப்பழம் விற்பனை தேனி மார்க்கெட்டில் களைகட்டி வருகிறது.கொடைக்கானல் மற்றும் சுற்றுக்கிராமங்களில் விளையும் நட்சத்திரப்பழம் தேனியில் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனை உப்புமிளகாய் பொடியை தொட்டுக்கொண்டு சாப்பிடுகின்றனர். மருத்துவக்குணம் கொண்ட இப்பழத்தை தேனி மக்கள் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பிட்ட சீசனில் மட்டுமே இப்பழம் விற்பனைக்கு வரும். பெண்களுக்கு இந்த பழம் மிக சிறந்த மருத்துவ பழமாக உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் கோளாறுகளை சரி செய்யும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில நாட்கள் மட்டுமே சீசன் இருக்கும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டால் இப்பழம் வரத்து நின்று விடும். இந்த பழத்தை  தேனியை சேர்ந்த 12க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர் எனவும் தேனி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : theni ,Kodaikanal ,Starfruit
× RELATED சத்தியமங்கலத்தில் ஆளுயர தேன் வாழைத்தார் ரூ.1000க்கு ஏலம்