×

மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை

மயிலாடுதுறை : மயிலாடுதுறை பகுதியில் இரவு நேரங்களில் நம்பர் இல்லாத வாகனங்களில் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் இரவு பகல் என்று எந்த நேரத்திலும் பறைவேட்டை தொடர்கிறது. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் பறவைகள் வேட்டையாடப்படுகிறது. சித்தர்காடு ரயில்வே லைன் கிழக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருவதால் இரண்டு போகம் விவசாயம் செய்கின்றனர்.

அதனால் பறவைகள், கொக்கு, நாரை, நமுடு, மயில், புறா, குயில் போன்ற பறவைகள் அப்பகுதியில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும் வாரத்தின் இரண்டு நாட்களில் ஒரு கும்பல் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் அங்கே வந்து பறவைகளை வேட்டையாடி செல்கின்றனர். பகல் நேரத்தில் வேட்டையாடியதுபோக இரவு நேரத்தில் பறவைகள் தங்கியிருக்கும் மரங்களைக் குறிவைத்து அவற்றையும் வேட்டையாடி வருகின்றனர். மேலும் பழந்தின்னி வெவ்வால்களையும் வேட்டையாடி வருகின்றனர். குடிசை பகுதிகள் உள்ள இடங்களில் உள்ள மூங்கில் மரம் மற்றும் பழமரங்களில் இதுபோன்ற பறவைகள் இரவு நேரத்தில் ஓய்வெடுக்கும்போது இரவு 10 மணிக்கு பிறகு அவற்றை வேட்டையாடுவதில் ஈடுபடுகின்றனர்.

பலமுறை அவர்களை விரட்டியும் கேட்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் தூக்கம் கெடுகிறது. ஒருசில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மக்கள் விரட்டியுள்ளனர். அவர்கள் வைத்துள்ள பல வண்டிகளில் நம்பர் பிளேட் இருப்பதில்லை, அவர்களை செல்போன் மூலம் படம் எடுக்கவும் முடிவதில்லை. நிறுத்தியிருந்த வாகனத்தை ஒருவர் செல்போன் மூலம் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த வாகனத்தை இரண்டு நபர்கள் துப்பாக்கியுடன் ஏறிச்சென்றுள்ளனர். தடை செய்யப்பட்ட பறவைகளை சுடுவோர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பறவைகளை சுடுவதற்கு நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தினால் துப்பாக்கிக்கான லைசென்சை ரத்து செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bird hunting ,Mayiladuthurai , Mayiladuthurai,Birds,Hunting,night time
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...