×

32 நிமிடங்களில் ஆணிப்படுக்கையில் 100 யோகாசனம் திண்டுக்கல் மாணவர் உலக சாதனை

திண்டுக்கல் :  ஆணிப்படுக்கையில் 32 நிமிடங்களில் 100 யோகாசனங்கள் செய்து திண்டுக்கல் மாணவர் உலக சாதனை நிகழ்த்தினார்.திண்டுக்கல்லை சேர்ந்தவர் தீபக்குமார். ஜிடிஎன் கல்லூரியில் பிஎஸ்சி உடற்கல்வி 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக யோகாசனம் செய்து வரும் இவர் உலக சாதனை படைக்க எண்ணினார். ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர் 1,500 ஆணி படுக்கையில், 25 நிமிடத்தில் 50 யோகாசனம் செய்திருப்பதுதான் சாதனையாக இருந்தது. இதனை முறியடிக்கும் நிகழ்ச்சி ஜிடிஎன் கல்லூரியில் நடந்தது.

 நடுவர்களாக குளோபல் நிறுவனத்தை சேர்ந்த அரவிந்த், ஜெயபிரதாப் இருந்தனர். இதில், தீபக்குமார் 1,500 ஆணி படுக்கையில் 15 நிமிடத்தில் 50 யோகாசனம் செய்து பழைய சாதனையை முறியடித்தார். மேலும் 32 நிமிடம் 40 விநாடிகளில் 100 யோகாசனங்களை செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதையடுத்து தீபக்குமாருக்கு குளோபல் நோபல் உலக சாதனை விருதை அந்நிறுவனத்தை சேர்ந்த டெல்லா ரவீன் வழங்கினார்.  நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை, முதல்வர் பாலகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீபக்குமார் இன்று 24 மணிநேரம் ஆணி படுக்கையில் பத்மாசனம் செய்து புதிய சாதனை படைக்கவுள்ளார்.


Tags : 100 Yogasanam Dindigul Student World Record , Dindigul, yogasanam, student ,Nail bed,Dindigul
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...