×

கர்நாடகாவில் கிறிஸ்துவ பிஷப் காவி உடை அணிந்து பூஜை செய்ததால் சர்ச்சை: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெல்காவியில் கத்தோலிக் கிறித்துவ மதத்தை சேர்ந்த பிஷப்புகள் காவி உடை மற்றும் ருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தது சர்ச்சையாகியுள்ளது. பெல்காம் மறைமாவட்ட பிஷப் பெர்னாண்டஸ் காவி உடை அணிந்து கழுத்தில் ருத்ராட்சம் மற்றும் நெற்றியில் திலகமிட்டு பூஜை செய்த புகைப்படங்களை செய்தியாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், இந்து சாமியார்களுடன் பிஷப் பெர்னாண்டஸ், சர்ச் வளாகத்தில் கிறிஸ்தவ மத சடங்குகளை நடத்தும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதற்கு, போப் பிரான்சிசால் மே 1 ம் தேதி பெல்காமின் 6வது பிஷப்பாக நியமிக்கப்பட்ட பெர்னாண்டஸ், இந்துக்களை தவறாக வழிநடத்தி, அவர்களை மதமாற்றம் செய்ய பார்க்கிறார் என குற்றம்சாட்டி உள்ளனர்.

அதேவேளையில் மத கட்டுப்பாடுகளை பிஷப் பெர்னாண்டஸ் மீறியதாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பிஷப் புகைப்படத்தை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர்களுக்கு ட்விட்டரில் ஒரு சில கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மிரட்டல் விடுத்தது சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பிஷப் பெர்னாண்டஸ் தற்போது ரோமில் உள்ளதாக கூறப்படுகிறது. பெல்காமில் இருந்து 28 கி.மீ., தூரத்தில் உள்ள தேஷ்னுர் சர்ச்சிற்கு பிஷப் பெர்னாண்டஸ் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி அன்று வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்ச் இதற்கு முன் விரக்தா மடம் என அழைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக இங்கு வந்த கிறிஸ்தவ மதபோதகர்கள், இங்கு பிரார்த்தனை செய்ய துவங்கினர்.

இந்தியர்களின் வழக்கப்படி காவி நிற கொடியும் ஏற்றப்பட்டிருந்தது. வழிபாட்டு தலம் கூட சிவலிங்க வடிவிலேயே இருக்கும் என்றார். மேலும் முதலில் இப்பகுதிக்கு வந்த மத போதகர்கள் இங்கு வாழ்ந்த மக்களை மத மாற்றம் செய்யவில்லை. மாறாக இங்கு வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்திற்கு மாறி, அவர்களை போல் சைவ உணவு பழக்கங்களையே கடைபிடித்தனர். அதன் காரணமாகவே காவி உடை அணிந்து பூஜை செய்ததாக பிஷப் பெர்னாண்டஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்ட செய்தியாளருக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : bishop ,Christian ,Karnataka , கர்நாடகா,பிஷப்,காவி உடை,புகைப்படம்,சர்ச்சை
× RELATED கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக...