×

காரைக்கால் அருகே பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

காரைக்கால்: காரைக்கால் அருகே திருப்பட்டினத்துக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒருவாரமாகியும் திருப்பட்டினத்துக்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்கால்-நாகப்பட்டினம் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.


Tags : Karaikal , Karaikal, irrigation, water, condemnation, farmers road rage
× RELATED ஆண்டிபட்டி பகுதியில் முருங்கை...