×

பெடரல் வங்கி கிளை திறப்பு

சென்னை: வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலகம் அருகே ராஜலட்சுமி நகர் 3வது மெயின்ரோட்டில் பெடரல் வங்கியின் புதிய கிளை நேற்று திறக்கப்பட்டது. இதை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சியாம் சீனிவாசன் தொடங்கி வைத்தார். ஏடிஎம் மற்றும் சிடிஎம் மையத்தை குருநானக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மர்லீன் மோரைஸ் தொடங்கி வைத்தார்.  வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை தமிழக அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைமை டாக்டர் அஸ்வத் நாராயணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பெடரல் வங்கியின் துணை தலைவரும், சென்னை மண்டல தலைவருமான இக்பால் மனோஜ் தலைமை தாங்கினார். மேலும் பெடரல் வங்கியின் சென்னை பிராந்திய தலைவர் ராஜீவ், வேளச்சேரி கிளையின் மூத்த மானேஜர்  வெங்கட சிவசீனிவாசராவ் மற்றும் பெடரல் வங்கியின் இதர ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Federal Bank Branch , Federal Bank, Branch ,Opening
× RELATED மருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை...