×

எர்ணாவூர் மேம்பாலம் அருகே பல்லாங்குழியாக மாறிய சாலை: பொதுமக்கள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூரில்  எர்ணாவூர் மேம்பாலம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி சகதியாக மாறியுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாவூர் 4வது வார்டு எர்ணாவூர் மேம்பாலம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து  வருகின்றனர். இவர்கள் அனைவரும் மகாலட்சுமி நகர் பிரதான சாலை  வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.போக்குவரத்து மிகுந்த இந்த சாலை  பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும்போது சாலையிலுள்ள கருங்கற்கள் பாதங்களில் குத்தி காயம் ஏற்படுகிறது.

அவசரத்திற்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் மற்றும் குடிநீர் லாரிகள் வர முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மகாலட்சுமி நகர் பிரதான சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படவில்லை. இதனால் குண்டும் குழியுமாக மாறி, மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும் அடிக்கடி  மழை பெய்து வருவதால் குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது. எனவே இந்த சாலைய அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Road ,Ernakavur , Ernakavur Bridge, Falling, Public Avadi
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...