×

லேப்டாப் வழங்க கோரி திமுக எம்எல்ஏவிடம் மாணவர்கள் முறையீடு

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-2018, 2018-2019ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை தமிழக அரசின் லேப்டாப் வழங்காததால் கடந்த வாரம் பள்ளி முன்  மறியலில் ஈடுபட்டனர். அப்போது நேற்று லேப்டாப் பெற்று தருவதாக கூறினர். அதன்பேரில், நேற்று முன்னாள் மாணவர்களுக்கு பள்ளிக்கு வந்தபோது, லேப்டாப் வரவில்லை என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளனர். இதையடுத்து, முன்னாள் மாணவர்கள் சோழிங்கநல்லூர்  தொகுதி திமுக எம்எல்ஏ  அரவிந்த் ரமேஷை  அவருடைய வீட்டில் சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது,  வரும் 5ம் தேதி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி எம்எல்ஏ மாணவர்களிடம் கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : DMK , provide, laptop,DMK MLA,students
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...