×

இரும்பு கம்பிகள் மாற்றியமைக்கும் பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

சென்னை: ரயில்வே துறை சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் இரும்பு கம்பிகள் மாற்றியமைக்கும் பணி நடைபெறுவதால் நாளை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளனர்.தெற்கு ரயில்வே துறை சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்திலுள்ள இரும்பு கம்பிகள் மாற்றியமைக்கும் பணி இரு பகுதிகளாக நடைபெற இருப்பதால், சுரங்கப்பாதை இரும்பு பால கம்பிகள் மாற்றியமைக்கும் வரை சுரங்கப்பாதையில்  செல்லும் வாகன போக்குவரத்து ஒருவழிப் பாதையாக நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் போர் நினைவு சின்னம் - தலைமைச் செயலகம் வழியாக அதே சாலையில் செல்லலாம். இவ்வாகன போக்குவரத்தில்  எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் ராயபுரம் பாலம், ராஜாஜி சாலையில் இருந்து, காமராஜர் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. மாற்றுப் பாதையாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அணுகு சாலை - வடக்கு பக்க கோட்டை சாலை - ராஜா அண்ணாமலை மன்றம் - முத்துசாமி சாலை - (முத்துசாமி சிக்னல்) - முத்துசாமி பாலம் - வாலாஜா சிக்னல் - கொடிமர சாலை வழியாக  - போர் நினைவு சின்னம் சென்று காமராஜர் சாலையை சென்றடையலாம்.


Tags : Reserve Bank ,tunnel ,lane , replacing, iron rods, Reserve Bank, Subway
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...