×

டைம்ஸ் உலக பல்கலை தரவரிசை பட்டியல் முதல் 300 இடங்களில் இந்தியாவுக்கு இடமில்லை: ஆக்ஸ்போர்டு தொடர்ந்து முதலிடம்

லண்டன்: டைம்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தொடர்ந்து முதல் இடம் பிடித்துள்ளது. முதல் 300 இடங்களில் இந்திய பல்கலை இடம்பெறவில்லை.டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக் கழகம் உலகம் முழுவதும் உள்ள பல்கலை கழகங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் ெதாடர்ந்து 4வது ஆண்டாக முதல்  இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் 3வது இடத்தையும், ஸ்டான்போர்டு பல்கலை 4வது இடத்தையும், மசாசூசெட்ஸ்  தொழில்நுட்ப நிறுவனம் 5வது இடத்தை பிடித்துள்ளது. பிரின்செடன் பல்கலைக் கழகம் 6வது இடத்ைதயும், ஹார்வார்டு பல்கலைக்கழகம் 7வது இடத்ைதயும் பிடித்துள்ளன. யேல் பல்கலை 8வது இடம், சிகாகோ பல்கலைக்கழகம் 9வது இடம்,   லண்டன் இம்பீரியல் கல்லூரி 10 இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த தரவரிசைப் பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைக் கழகங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதுவரை 300 இடங்களுக்குள் வந்த பெங்களூர் ஐஐஎஸ்சியும் 301 முதல் 350வது  வரையிலான இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் புதிய வரவான ரூபர் ஐஐடி 351 முதல் 400 வரையிலான தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் 7 இந்திய பல்கலைக்கழகங்கள் தங்கள் தரவரிசையில் குறைந்துள்ளன.  அதேநேரத்தில் டெல்லி ஐஐடி, கராக்பூர் ஐஐடி மற்றும் ஜமியா மில்லியா இஸ்லாமியா ஆகியவை தரவரிசையில் உயர்ந்துள்ளன. இது தொடர்பாக டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலுக்கான செய்தி ஆசிரியர்  எலை போத்வெல் கூறியதாவது: உலகத்தரமான உயர்கல்வியை வழங்குவதற்கான வாய்ப்பை இந்தியா கொண்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் இளைஞர் மக்கள்தொகை, ஆங்கில பயன்பாடு, பொருளாதாரம் ஆகியவை இதற்கு சாதகமாக  இருந்தாலும் இந்திய பல்கலைக்கழகங்களால் முதல் 300 இடங்களை பெறமுடியாதது ஏமாற்றமளிக்கிறது. அதே நேரத்தில் இந்திய அரசு உலகத்தரமான கல்வியை வழங்க ஆர்வம் கொண்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களை  ஈர்த்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : India ,Times World University ,Oxford , Times World University, Rankings ,List
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...