தென் ஆப்பரிக்காவுடன் மோதும் 20 ஓவர் போட்டிக்கு இந்திய வீரர்கள் அறிவிப்பு: ராகுல் நீக்கம்; இளம் வீரர் சுப்மான் கில் தேர்வு

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட், இருபது ஓவர் போட்டிக்கு இந்திய அணி வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.தென் ஆப்பிரிக்கா அணி மூன்று இருபது ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வரும் 15ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 23ம் தேதி வரை விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்கா  அணியுடன் விளையாடுவதற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. டெஸ்ட் அணிக்கு இளம் கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் ராகுல் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட இண்டீஸ் தொடரில் அவர் சரியாக ஆடாததால் அவர் இடம்பெற வில்லை. இருபது ஓவர் அணிக்கு மீண்டும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் டோனிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.இருபது ஓவர் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, ராகுல், ரிஷப் பண்ட், தீபக் சாஹர், ராகுல் சாஹர், கலீல்  அகமது, நவதீப் சைனிடெஸ்ட் அணி : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அகர்வால், புஜாரா, ரகானே, சுப்மான் கில், விஹாரி, ஆர். அஸ்வின், ஜடேஜா, ரிஷப் பண்ட், விருத்திமான் சஹா, குல்தீப் யாதவ், முகமது சமி, பும்ரா, இஷாந்த் சர்மா.

Tags : Rahul ,Indians ,Subman Gill ,South Africa Young , Rahul dismissed, Young player Subman Gill ,chosen
× RELATED ராகுல் தோல்வி பற்றி நையாண்டி தொடர்: இணையத்தில் விரைவில் வெளியீடு