×

ஆந்திர மாநிலம் கர்னூலில் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: மத்திய அமைச்சர் ராஜ்நாத், முதல்வர் ஜெகன்மோகன் பாராட்டு

திருமலை: ஆந்திர மாநிலம், கர்னூலில் குறுகிய தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் பீரங்கிகளை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.ஆந்திராவின் உரவகல்லில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உள்ளது. இங்கு குறைந்த எடை கொண்ட மற்றும் ராணுவ வீரர்கள் எளிதாக எடுத்து செல்லும் விதமாக உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட நவீன  ரக ஏவுகணை சோதனைக்காக கொண்டு வரப்பட்டது. சுமார் 2.5 கிமீ தூரத்தில் உள்ள எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை நேற்று முன்தினம் நடந்தது. 3வது தலைமுறை ஏவுகணையான இது, நவீன யுக்தியுடன் தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை  நேற்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றியை தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆகியோர் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை விரைவில் ராணுவ பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Rajnath ,Jaganmohan , Kurnool, Andhra Pradesh, Union Minister Rajnath , Chief Minister, Jaganmohan
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...