×

பொங்கல் பண்டிகையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது

சென்னை: பொங்கல் பண்டிக்கை கொண்டாட ஜனவரி 10ம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. மேலும் 11ம் தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு துவங்குகிறது. பொங்கல் பண்டிகை 2020ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பொங்கல் பண்டிக்கைக்கு ஊர்களுக்கு செல்ல 120 நாட்கள் உள்ள நிலையில் அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதனால், காலை 6 மணி முதலே சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் காத்திருந்தனர். குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் ஒரு சில ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன.

இதையடுத்து, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரசில் 10ம் தேதி பயணத்துக்கு முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இன்னும் 10 இடமும்,  இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 66 இடம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் 180 இடம்,  ஸ்லீப்பர் பெட்டியில் 234 இடங்களும் உள்ளது. தூத்துக்குடி செல்லும் பியர்ல் சிட்டி எக்ஸ்பிரசில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 6 இடம், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 52 இடம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் அனைத்து டிக்ெகட்டுகள் முன்பதிவு செய்ய்பட்டது. ஸ்லீப்பர் ெபட்டியில் 78 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். நெல்லை எக்ஸ்பிரசில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஆர்ஏசியில் 3 பேரும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் ஆர்ஏசியில் 34 பேரும், ஸ்லீப்பர் ெபட்டிக்கு 125 பேரும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் உள்ள முதல் ஏசி வகுப்பு பெட்டியில் இன்னும் 18 இடமும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 15 இடம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் இன்னும் 41 இடம் காலியாக உள்ளது.

ஸ்லீப்பர் பெட்டியில் 68 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரசில் உள்ள முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இன்னும் 6 இடம், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 21 இடம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் ஆர்ஏசி 11 இடம் காலியாக உள்ளது. அதே நேரத்தில் ஸ்லீப்பர் பெட்டியில் 68 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.  கோவை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ்சில் உள்ள முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 11 இடம், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 31 இடம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் 185 இடம், ஸ்லீப்பர் பெட்டியில் 286 இடம் உள்ளது. திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரசில் உள்ள முதல் வகுப்பு பெட்டியில் 14 இடம் உள்ளது, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 55 இடம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் 174 இடம், ஸ்லீப்பர் பெட்டியில் ஆர்ஏசியில் 7 இடம் உள்ளது.

நெல்லை எக்ஸ்பிரசில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் ஆர்ஏசியில் 3 பேரும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் ஆர்ஏசியில் 34 பேரும், ஸ்லீப்பர் பெட்டியில் 125 பேரும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். செந்துர் எக்ஸ்பிரசில் இன்னும் ஸ்லீப்பர் பெட்டியில் இன்னும் 125 இடம் உள்ளது. அதைப் போன்று சேரன் எக்ஸ்பிரசில் முதல் வகுப்பு ஏசி ெபட்டியில் இன்னும் 6 இடம், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் இன்னும் 18 இடம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் 164 இடம் உள்ளது. ஸ்லீப்பர் பெட்டியில் 52 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரசில் உள்ள முதல் ஏசி பெட்ஸ்லீப்பர் பெட்டியில் 234 இடமும் முன்பதிவு செய்யாமல் காலியாக உள்ளது.

மேலும், ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்றும், ஞாயிற்றுக் கிழமை ஊருக்கு செல்ல விரும்புவோர் நாளையும், திங்கள் கிழமை ஊருக்கு செல்ல விரும்புவோர் செப்டம்பர் 15ம் தேதியும், பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் பயணம் செய்வோர் விரும்புவோர் (14ம் தேதி) செவ்வாய் கிழமை பயணம் செய்ய செப்டம்பர் 16ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பொங்கல் பண்டிக்கை முடிந்து சென்னைக்கு திரும்பி வர ஜனவரி 17 தேதிக்கு செப்டம்பர் 19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கு செப்டம்பர் 20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதி சென்னை வர செப்டம்பர் 21ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Tags : Booking ,Pongal ,festival , Pongal festival, train ticket booking
× RELATED டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டுமே