×

இந்தியா முழுவதும் 6612 வழக்குகளில் விசாரணை நடத்தி 174 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரை: மனித உரிமை ஆணையம் தகவல்

சென்னை: சென்னையில் வன்கொடுமை குறித்து 2 நாட்கள் பொது விசாரணை நடத்த டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் இந்த பொது விசாரணை நடத்தப்பட்டது. இதை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுமான எச்.எல்.தத்து தொடங்கி வைத்தார்.கூட்டத்தில் தேசிய மனித உரிமை ஆணைய செகரட்டரி ஜெனரல் ஜெய்தீப் கோவிந்த் பேசியதாவது: தமிழகத்தில் 1993ல் இருந்து இதுவரை 45,799 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் 3,211 புகார்கள் வந்தது.

இதில் 2565 புகார்கள் முடிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள 446 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் 163 வழக்குகளில் விசாரணை நடத்தி 5.48 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6612 வழக்குகளில் விசாரணை நடத்தி 1,74 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பொது மக்களிடம் இருந்து புகார் மனுக்களும் பெறப்பட்டன தொடர்ந்து இன்றும் விசாரணை நடைபெறுகிறது.


Tags : Investigation ,India ,Human Rights Commission , India, Human Rights Commission
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...