ஆத்தூரில் கூட்டு பலாத்காரம்,.. கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி: திடுக்கிடும் வாக்குமூலம்

ஆத்தூர்: ஆத்தூரில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் காதலனுடன் தனிமையில் இருந்ததை படம் எடுத்து 5 வாலிபர்கள் மிரட்டி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதையும் செல்போனில் படம் பிடித்து அவ்வப்போது மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி, சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில், புகார் தெரிவித்துவிட்டு வீடு திரும்பிய மாணவி, மனஉளைச்சலுடன் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை அதிகளவில் விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே, இந்த பிரச்னை தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, 5 பேர் கும்பலில்  குறிப்பிட்ட கல்லூரி வாகனத்தை ஓட்டும் டிரைவர் ஒருவரும் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர் மூலம் மேலும் பல மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தங்களது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதையும் வீடியோ எடுத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதும் தெரியவந்துள்ளது. இதில் 3 வாலிபர்களின் குடும்பத்தினரிடம் ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இவர்கள் சிக்கினால், மேலும் பல தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கல்லூரி மாணவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தன்னை அதே கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் சந்தித்து, “உன்னுடைய காதலனுடன் ஊர் சுற்றியதை படம் எடுத்து வைத்துள்ளேன்.

இதனை உன் வீட்டில் காட்டி விடுவேன்” என கூறி மிரட்டினார். மேலும், என்னுடைய நிர்வாண படமும் அவரிடம் உள்ளதாக கூறி மிரட்டி வந்தார். இந்நிலையில், நான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது என்னை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுக்கச் சொல்லி மிரட்டினார். அதன்படி, நான் விடுதி அறையில் நிர்வாணமாக நின்று வீடியோ காலில் போஸ் கொடுத்தேன். அதன் பின்னர் என்னை மீண்டும் மிரட்டி வந்தார். இதனால் மனம் உடைந்து தற்ெகாலைக்கு முயன்றேன்” என தெரிவித்துள்ளார்.   இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : rape ,Athur , Attur, rape victim, college student, attempted suicide
× RELATED கூட்டு பலாத்கார கதையில் டபுள் ஹீரோயின்