×

எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன தொழிலார்களுக்கு செப்டம்பர் மாதத்தில் 16 நாட்கள் விடுப்பு அறிவித்திருந்த நிலையில் மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு

சென்னை: செப்டம்பர் மாதத்தில் சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன தொழிலார்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14, 16, 19, 20, 21, 23, 24, ஆகிய 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7.5 சதவீதம் ஆகும். ஆனால் நாட்டில் இந்த துறை தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு வாகன தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நிறுவனங்களை மூடி வருகின்றனர்.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது மானேசர் மற்றும் குர்கான் ஆலைகளை இரண்டு நாட்களுக்கு மூடும் திட்டத்தை அறிவித்தது. சென்னை எண்ணூரில் கனரக வாகன உற்பத்தி செய்யும் அசோக் லேலண்ட் என்ற நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 1800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு 2018-19ம் ஆண்டுக்கான போனஸ் கடந்த மே மாதம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் போனஸ் வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதுதொடர்பாக, தொழிற்சங்கம், நிறுவன அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் போனஸ் வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு கடந்த 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளித்தது. வாகன உற்பத்தி குறைவால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்ட்டது. இந்த அறிவிப்பால் ஊதியமின்றி தற்காலிக ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அசோக் லேலண்ட் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தியது. தற்போது எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன தொழிலார்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14, 16, 19, 20, 21, 23, 24, ஆகிய 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்டாய விடுப்பு அறிவித்த செப்டம்பர் 14, 19, 20, 21, 24 ஆகிய நாட்களுக்கு ஊதியம் வழங்குவது பற்றி அசோக் லேலண்ட் தொழிற்சங்கத்துடன் பேசி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ashok Leyland ,leave ,Ennore , Nunnur, Ashok Leyland, Compulsory Leave
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...