×

97 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு கீழணை திறப்பு

கும்பகோணம்: காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்காக கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து அணைக்கரை கீழணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை பாசனத்துக்காக தொழில்துறை அமைச்சர் எம்சி.சம்பத் நேற்று திறந்து வைத்தார். கீழணையில் இருந்து வடவாறு வாய்க்காலில் 1800 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடியும், தெற்குராஜன் வாய்க்காலில் 400 கன அடியும் என மொத்தம் 2600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கடலூரில் 47,997 ஏக்கர் பரப்பிலும், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் 39,050 ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி பெறும்.

கீழணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 250 கன அடி தண்ணீரின் மூலம் தஞ்சை மாவட்டம் கீழ்ராமன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் வாய்க்கால் மற்றும் மேல்ராமன் வாய்க்கால் வாயிலாக 9,000 ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். மேலும் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களி–்ல் உள்ள விளைநிலங்களும் பாசன வசதிபெறும். பின்னர் தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பாசன வசதிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தஞ்சை, கடலூர், நாகை மாவட்டங்கள் நெல் உற்பத்தியில் முதலிடம் பிடிக்க வேண்டும். சரியான தருணத்தில் தான் தண்ணீர் திறந்து உள்ளோம் என்றார்.அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர்கள் அண்ணாதுரை, அன்புசெல்வன், சுரேஷ், எம்எல்ஏ ராமஜெயலிங்கம், முன்னாள் எம்பி பாரதிமோகன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Opening , Samba cultivation
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா