×

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ தேர்வு வாரியம் சார்பில், அரசு மருத்துவனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிட்டு, கடந்த ஜூன் 9ல் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் வெளியானாலும், தேர்வு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என சிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உட்பட 12 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.

அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. ஆனால் தேர்வு நடைமுறையை முறையாக பின்பற்றி வெளியிடபடவில்லை. தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளன. தேர்வு பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடபடவில்லை. எனவே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும், என கோரிக்வை விடித்திருந்தனர். இந்த வழக்கானது, நீதிபதி தண்டபாணி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மற்றும் சுகாதாரத்துறை செயலர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

Tags : High Court , Government Hospital, Nurse, Appointment, Interim Prohibition, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...