×

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கே.எல்.ராகுல் நீக்கம்... ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரர்

புதுடெல்லி: தென்னாபிரிக்க கிரிகெட் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி தர்மசாலாவில் வரும் 15ம் தேதியும், 2-வது போட்டி மொகாலியில் 18ம் தேதியும், 3-வது போட்டி பெங்களூருவில் 22ம் தேதியும் நடக்கிறது. டி-20 போட்டிக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் அக்டோபர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ல் புனேவிலும், 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி வீரர்களை எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் இன்று கூடி தேர்வு செய்தது. இதையடுத்து தற்போது, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல்:

1. விராட் கோலி (கேப்டன்)
2. மாயங்க் அகர்வால்
3. ரோகித் சர்மா
4. புஜாரா
5. ரஹானே
6. ஹனுமா விகாரி
7. ரிஷப் பண்ட்
8. விருத்திமான் சாஹா
9. அஸ்வின்
10. நவீந்தர ஜடேஜா
11. குல்தீப் யாதவ்  
12. முகமது ஷமி
13. ஜஸ்பிரித் பும்ரா
14. இஷாந்த் சர்மா
15. சுப்மான் கில்

தென் ஆப்பிரிக்க அங்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா துவக்க ஆட்டக்காரர் களமிறங்குகிறார். அதேபோல, ஷிகர் தவானும் இந்த அணியில் இடம்பெறவில்லை. மேலும், வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் அணியில் இடம் பெறவில்லை.

Tags : team ,Indian ,South Africa Test ,KL Rahul , South Africa Test Series, Indian team, KL Rahul, Rohit Sharma
× RELATED இந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்