×

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு குழு அறிவித்துள்ளது. மயங் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ஹனுமா விகாரி, ரிசப் பந்த், விருத்திமான் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா , இஷாந்த் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.


Tags : Indian ,cricket team ,Test ,South Africa , South African , Cricket Test, Indian Team, Announced
× RELATED டிஎன்பிஎல் தொடர் தள்ளிவைப்பு