×

ஈரானில் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்திய பிரிட்டிஷ்,ஆஸ்திரேலிய பயண பதிவர்கள் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தெஹ்ரான்: அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்தியமைக்காக பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பயண பதிவர்கள் இருவருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டனுக்கு சாலை வழியாக எஸ்.யூ.வி ரக வாகனத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட ஜோடி ஒன்று 2017ம் ஆண்டு முதல் தனது பயத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டு வருகிறது. பிரிட்டனை சேர்ந்த ஜோலிக்கிங் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவரது ஆண் நண்பர் மார்க் பெர்க்கிங் ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளனர்.

பாகிஸ்தான், இந்தியா, கிர்கிஸ்தான் என பல நாடுகளின் வழியே அதன் இயற்கையையும், அழகையையும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காட்சிப்படுத்தி பயணத்திற்காக ஏங்கும் பார்வையாளர்களை உற்சாகமூட்டி வந்தனர். கடந்த ஜூன் 30ம் தேதி தாங்கள் ஈரானை எட்டிவிட்டதாகவும் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இருப்பதாகவும் அந்த ஜோடி வீடியோ வெளியிட்டிருந்தது. அதன் பிறகு அவர்கள் குறித்த தகவல் ஏதும் வராத நிலையில், அவரது ரசிகர்கள் அச்சம் தெரிவித்தனர். ஒரு மாதமாக எந்த தகவலும் இல்லாததால் அவர்களுக்கு பயணத்தின் போது ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்சினர். அவர்களது குடும்பத்தாரும் தங்கள் நாடுகளின் தூதரகங்கள் மூலம் ஈரான் வெளியுறவுத்துறைக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் அனுமதி, உரிமம் இன்றி ட்ரோன் எனும் பறக்கும் கேமராக்களை பயன்படுத்தியமைக்காகவும், உளவாளிகளாக இருக்க கூடும் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் தூதரகங்களை அழைத்து விசாரணை நடைபெறும் நிலையில், இது முற்றிலும் தவறுதலான புரிதலால் நடந்தது என்றும், ஈரானின் ட்ரோன் சட்டத்தை அறியாததால் பயண பதிவர்கள் கைது செய்யப்பட்டிருக்க கூடும் என்றும் கூறியுள்ள அவர்களது பெற்றோர் இருவரையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : British ,travel bloggers ,prison ,Australian ,Iran , Iran, drone, British, Australia, travel bloggers, 2 people, 10 years in prison
× RELATED மது போதையில் கடும் ரகளை இங்கிலாந்து...