×

பாம்பன் கடற்கரையில் செத்து மிதக்கும் மீன்கள்.... கடலின் நிறம் மாறியதால் பீதியில் பொதுமக்கள்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மன்னார்வளைகுடா கடல் பகுதியில் கடல் நீர் திடீரென நிறம் மாறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார். மேலும் கடலில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குண்டுகால் என்ற பகுதியில் கடல் நீரானது நேற்று முதல் சற்று நிறம் மாறி காணப்பட்டது. குறிப்பாக மன்னார்வளைகுடா கடல் பகுதியில் சுனாமிக்கு பிறகும், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின் காரணமாகவும், அவ்வப்போது கடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் கடல் சீற்றம், கடல் உள்வாங்குதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடலில் நிறம் மாறிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, அரியவகை மீன்கள் செத்து கரை ஒதுங்கி இருப்பது மக்களிடையே மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இது போன்ற நிகழ்வு இந்த பகுதியில் இதுவரை நிகழ்ந்ததே இல்லை. இது குறித்து ராமநாதபுரம் மீன்வள துறை இணை இயக்குனர் காத்தவராயனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரிடமும் மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில் மண்டபத்தில் உள்ள CMFRI என்ற அமைப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்த பகுதியில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலின் நிறம் திடீரென பச்சை நிறத்தில் ஏன் மாறியுள்ளது என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக சென்னை மெரினாவில் கடல்நீர் நிறம் மாறியது குறிப்பிடத்தக்கது. அதுபோல, இங்கு ஜெல்லி மீன்களால் கடல் நீர் மாறுகிறதா அல்லது கடலில் ஏதேனும் ரசாயனம் கலக்க படுகிறதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏன்னென்றால் குந்தக்கால் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலமாக ஏதேனும் ராசாயனம் கலப்பதால் கடல் நிறம் மாறியுள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Tags : Pampan ,beach , Pompon Beach, fishes, sea color, changed
× RELATED பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி...