×

வெற்றியின் விளிம்பில் இந்தியா ஏ

திருவனந்தபுரம்: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி வெற்றியை நெருங்கி உள்ளது. கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் கில் 90, ஜலஜ் சக்சேனா 61* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 139 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது.

நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்துள்ளது. ஹம்சா 44, கிளாசன் 48, முல்டர் 46 ரன் எடுத்தனர். சிபம்லா 5, லுங்கி என்ஜிடி (0) களத்தில்  உள்ளனர். கை வசம் 1 விக்கெட் இருக்க தென் ஆப்ரிக்கா 40 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால், இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Tags : India , India a
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக...