×

அண்ணாவின் பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை

சென்னை: அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருஉருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்யப்படும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: அண்ணாவின் 111 வது பிறந்த நாளான வரும் 15ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள  அண்ணா திருஉருவச்சிலைக்கு,  அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வருமான  எடப்பாடிபழனிசாமி ஆகியோர் தலைமையில், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள்மலர் தூவி மரியாதை செலுத்த  உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும்  நிர்வாகிகள்  கலந்துகொள்ள  வேண்டும்.

Tags : Anna ,Birthday Celebration , Anna's birthday party, amity, honor
× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று