×

ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது

மதுரை: ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுவிக்கக்கோரி ஆட்ெகாணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என கூறிய ஐகோர்ட் கிளை, இது தொடர்பான மனு மீதான விசாரணையை தனி நீதிபதிக்கு மாற்றியது. கன்னியாகுமரி மாவட்டம், நீரோடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஹென்றி (61). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள்ளார். இவர் தன்னை முன்கூட்டியே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர், ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுவிக்க கோரும் மனுக்கள் எந்த அடிப்படையில், ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்படுகிறது எனத் தெரியவில்லை. பொதுவாக ஒருவரை ஆஜர்படுத்தக் கோரும் மனுக்களைத்தான் ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். முன்கூட்டி விடுவிக்கக்கோரி அரசுக்கு உத்தரவிடக்கோரும் மனுக்களை, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 482 கீழ் தான் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இந்த மனு, தனி நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர். இதேபோல், ஐகோர்ட் கிளையின் எல்லைக்குட்பட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தனி நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டன.

Tags : release ,life inmates , A petition cannot be filed, free life prisoners
× RELATED தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத...