மோடியின் புதிய முதன்மை செயலர் பொறுப்பேற்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் புதிய முதன்மை செயலாளராக பிரமோத் குமார் மிஸ்ரா பொறுப்பேற்றார். பிரதமரின் முதன்மை செயலாளராக இருந்து வந்த நிருபேந்திரா மிஸ்ரா சமீபத்தில் பதவி விலகினார். பிரதமர் மோடி அவரை 2 வாரம் இந்த பதவியில் நீடிக்கும்படி வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து, பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த பிரமோத் குமார் மிஸ்ரா, பிரதமரின் புதிய முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

Tags : Modi ,chief secretary , Modi's new chief secretary
× RELATED சொல்லிட்டாங்க...