×

டிடிவி.தினகரன் திமுகவில் சேருவார் : -ராஜேந்திரபாலாஜி பேட்டி

மதுரை: விருதுநகரில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டிடிவி தினகரன் தனது கட்சியை விட்டு விலகி திமுகவில் சேருவார் என்று கூறினார். வெளிநாடு சென்று திரும்பிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘வெளிநாட்டு முதலீடு தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும். டி.டி.வி.தினகரன் எம்ஜிஆர் ரசிகர் இல்லை. அவர் சிவாஜி ரசிகர். புகழேந்தி சென்றதால் தினகரன் கூடாரம் காலியாகிவிட்டது. தினகரனும் தனது கட்சியை விட்டு விலகி திமுகவுக்கு சென்று விடுவார்’’ என்றார்.

அமைச்சர்கள் திமுகவில் இணைவார்கள் : -டிடிவி.தினகரன் பதில்

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியில், ‘‘வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஈர்த்து வருவதால் எடப்பாடி உலகின் 8வது அதிசயம் என்கிறார் அமைச்சர் உதயகுமார். இவர் 9வது உலக அதிசயம். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நான் திமுகவில் இணையப்போவதாக கூறியிருக்கிறார். அதிமுக அமைச்சர்கள்தான் திமுகவில் இணைய உள்ளனர். அமைச்சர்களுக்கு மடியில் கனம் உள்ளது. அமமுகவில் பலர் பிரிந்து சென்றாலும் 98 சதவீதம் நிர்வாகிகள் கட்சியில் உள்ளனர்’’ என்றார்.

Tags : DDV.Dinakaran ,interview ,DMK ,Rajendrapalaji , TTV.Dinakaran , join DMK,Rajendrapalaji interview
× RELATED ரஜினி அழைப்பு விடுத்தாலும் திமுக...