×

5 ஆண்டுகளுக்கு புதிதாக தனியார் பள்ளிகள் துவங்க அனுமதி வழங்கக்கூடாது : சங்க நிர்வாகி பேட்டி

தஞ்சை: தஞ்சையில் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொது செயலாளர் நந்தகுமார் நேற்று அளித்த பேட்டி: அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகள் முடிவடைந்த பள்ளிகளுக்கு நிரந்தரமாக அங்கீகாரம் வழங்க வேண்டும். பள்ளி கட்டிடங்களுக்கான அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே முன்பு போல 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்க வேண்டும். புதிதாக தனியார் பள்ளிகள் துவங்க மாட்டோம் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். 5 ஆண்டுகளுக்கு புதிதாக தனியார் பள்ளிகள் துவங்க அனுமதி கொடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : schools , Private schools ,should not be allowed , start new schools for 5 years, Interview
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...