×

விழுப்புரம், தி.மலை, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்,புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கரூர், மதுரை, குமரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி , குறைந்த பட்ச வெப்பநிலை 25 செல்சியசும் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்அதிகபட்சமாக  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. செஞ்சி, காவேரிப்பாக்கத்தில் தலா 5 செ.மீ மழையும், நீலகிரி ஜி.பஜார், புதுக்கோட்டையில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


Tags : districts ,Mt ,Villupuram , Meteorological Center, Warning, Convection, Heavy Rain
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை