அக்டோபா 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் : மதுராவில் பிரதமர் மோடி உரை

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதேபோல கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய் திட்டத்தையும் மதுராவில் மோடி துவக்கி வைத்தார்.

தேசிய கால்நடை நோய் தடுப்பு  திட்டம்

கால்நடைகளுக்கு பொதுவாக பரவும் கோமாரி நோய், கருச்சிதைவு போன்ற நோய்களை தடுக்க கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய் தடுப்பு மருந்துகளை 2024ம் ஆண்டுக்குள் ரூ.12,652 கோடி செலவில் சுமார் 5 கோடி கால்நடைகளுக்கு தீவிரமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  தடுப்பூசியின் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் விலங்குகளின் மூலம் ஏற்படும் கால் மற்றும் வாய் நோய் மற்றும் ப்ரூசெல்லோசிஸ் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்தி 2030-ம் ஆண்டிற்குள் இவற்றை முற்றிலுமாக அழித்தொழிப்பது என்பதையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் தொடக்க விழா, உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, ஹெலிகாப்டர் மூலம் மதுரா சென்ற பிரதமர் நரேந்திரமோடியை, உத்தரப்பிரதேச  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளைப் பார்வையிட்டார். நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும், அதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் குறித்தும், கால்நடை மருத்துவர்களிடம் கலந்துரையாடினார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய கால்நடை செயற்கை கருத்தரிப்பு முறை திட்டத்தையும் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள பசு பராமரிப்பு மையத்தையும் பார்வையிட்டார். அதே நேரத்தில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து 687 மாவட்டங்களிலும் உள்ள விவசாய அறிவியலுக்கான மையங்களிலும் தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை முறையிலான கருத்தரிப்பு, உற்பத்தி போன்றவை குறித்து நடைபெஆக்டொபர் றவிருக்கும் பயிலரங்குகளையும் அவர் தொடக்கி வைத்தார்.

பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரச்சாரத்தை மோடி தொடங்கி வைத்தார்

இதனிடையே மதுராவில் ,குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது, குப்பைகளில் இருந்து மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் கழிவை பிரிக்கும் பணி பற்றி மோடி கேட்டறிந்தார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரச்சாரத்தை மோடி இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் மதுராவில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை மதுராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய அவர், அக்டோபா 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்ற சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மோடி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும்  உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

தெரிவித்துள்ளார்.

Related Stories: