×

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் வடிவேலு படப்பாணியில் கொள்ளையடிக்கச் சென்றவன் சிக்கினான்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன் திடீரென வீட்டின் உரிமையாளர் வந்ததால் வசமாகச் சிக்கிக் கொண்டான். நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட இந்த காட்சியைப் போன்றே திருடுவதற்கு திட்டமிட்டு அதனை நிறைவேற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காமராஜ் நகர் பகுதியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சிவசாம்பு வசித்து வருகிறார். வெளியூர் சென்றிருந்த இவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டுள்ளார்.

ஆனால் வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்த சிவசாம்பு உடனடியாக கூச்சலிட்டதால் உள்ளிருந்த திருடன் மேல்மாடிக்கு சென்று அங்கிருந்து காம்பௌண்ட் சுவர் ஏறி வெளியேற குதித்தபோது காலில் காயம் ஏற்பட்டு ஓடமுடியாததால் தவித்தவனை பொதுமக்கள் பிடித்து போளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்தத் திருடன் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்துள்ளது.

சிவசாம்புவின் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட சதீஷ் முன்பக்க கதவினை உடைத்து வீட்டினுள் சென்று நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துள்ளார். பின்னர் சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை வீட்டினுள் அவன் சென்ற இடத்தில் எல்லாம் வடிவேல் படப்பாணியில் தூவி விட்டு வெளியே செல்ல தயாராக இருக்கும்போதுதான் போலீசில் சிக்கி கொண்டான்.

Tags : Vadivelu ,house ,police inspector ,robber , Retired Police Assistant Inspector, Real Estate, Vadivelu Batman, Robbery, Trapped
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்