×

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மதிமுக சார்பில் செப்.15ல் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் 11வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Farooq Abdullah ,Kashmir ,Waiko Supreme Court , Former Chief Minister of Kashmir, Farooq Abdullah, Vaiko, Supreme Court, Appeal
× RELATED மருத்துவப் படிப்பில்...