×

7 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையானது சென்னை அண்ணாசாலை!!!

சென்னை: சென்னை அண்ணா சாலையை இருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்து சோதனை ஓட்டம் தொடங்கியது. போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் 2 நாள் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததால் ஐ.பி.ரோடு முதல் ஒயிட்ஸ்ரோடு வரை மீண்டும் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா சாலை மெட்ரோ ரயில் பணிகளுக்காக, கடந்த 2012ம் ஆண்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.

 இந்நிலையில் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையொட்டி போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே அண்ணா சாலை மற்றும் ஜி.பி.சாலை முதல் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை வரை மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதற்காக இன்று(11-09-2019) மற்றும் நாளை(12-09-2019) ஆகிய இரு நாட்கள் சோதனை ஓட்டம் விடப்படுகிறது.

சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை நடைமுறைப்படுத்தும் மாற்றங்கள்...

*அண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

*தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது.

*மாறாக வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.

*ஓயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

*ஸ்மித் ரோடு ஒரு வழிப்பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிப்பப்படுகிறது.

*அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.

*மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து (வெஸ்ட்காட் ரோடு) அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டு அடைந்து ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாக செல்லலாம்.



Tags : road ,Chennai , Anna Road, Traffic, Transport, Commissioner Eleazar, Inspection
× RELATED சாக்கடை வடிகால் பணிக்காக...