×

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

மும்பை: தெற்கு மும்பை பகுதியில் 3 மாடி கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.  தெற்கு மும்பை பகுதியில் உள்ள போர்ட் பகுதியில் மங்கள்தாஸ் சாலையில் யூசுப் என்ற 3 மாடி கட்டிடம் உள்ளது. நேற்றிரவு 9.15 மணி அளவில் இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.  தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் மற்றும் பிரிஹான் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்றனர். தவிர, பேரிடர் நிர்வாக பிரிவினரும் சென்றனர்.
உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில்ச சிக்கிய சிலர் மீட்கப்பட்டனர். இருப்பினும் சுமார் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகில் உள்ள கட்டிடங்களில் தங்கியிருந்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags : Mumbai , Mumbai, building was demolished
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!