×

2013ம் ஆண்டு புத்த கயா குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முஜாகிதீன் தீவிரவாதி துப்பாக்கி முனையில் கைது

* கொத்தனார் போல் சென்னையில் பதுங்கல் * ஐஎஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு?

சென்னை: 2013ம் ஆண்டு புத்தகயா குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜாமத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதியை கொல்கத்தா சிறப்பு அதிரடிப்படையினர் ெசன்னையில் துப்பாக்கி முனையில் ேநற்று கைது  செய்தனர்.பீகார் மாநிலம் புத்தகயாவில் கடந்த 2013ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு ெசய்தது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5  தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது ெசய்தனர். அதைதொடர்ந்து இந்தியன் முஜாகிதீன் அமைப்பை மத்திய அரசு தடை செய்தது.பின்னர் அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் புதிதாக ஜமாத் உல் முஜாகிதீன் ஆப் பங்களாதேஷ் என்ற அமைப்பை மேற்கு வங்கத்தை தலைமையிடமாக தொடங்கி நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பீகாரில் உள்ள புத்தகயா பகுதிக்கு தலாய்லாமா வருகை தந்தார். அப்போது புத்தகயாவில் வெடிக்காத நிலையில் 2 வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு வழக்கு பதிவு  செய்து 7 தீவிரவாதிகளை கைது செய்தனர். அதில் நஷீர் ஷேக் என்ற தீவிரவாதி தமிழக கடலோர பகுதிகளில் பலருக்கு வெடிகுண்டு தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நஷீர் ஷேக்கும் கட்டிட தொழிலாளியாக  பதுங்கி இருந்த போது தான் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவன் ஐதராபாத் சிறையில் உள்ளார்.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அதிரடி படையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜமாத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவனான இயாஸ் அகமதுவை கைது செய்தனர். அப்போது தான் புத்தகாயா  குண்டு வைத்த வழக்கில் இந்த அமைப்புக்கு நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது.மேலும், தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் கொல்கத்தா அதிரடி படையினர் தொடர் தேடுதல் வேட்டையால்  ஜமாத் உல் முஜாகிதீன் ஆப் பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். தீவிரவாதி இயாஸ் அகமது அளித்த தகவலின் படி ஷேக் அசத்துல்லா என்ற மற்றொரு தீவிரவாதி ெசன்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. மேலும், இயாஸ் அகமது கைதாவதற்கு முன்பாக தன் கூட்டாளியான ஷேக் அசத்துல்லாவுடன்  செல்போன்மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.அதைதொடர்ந்து கொல்கத்தா அதிரடி படையினர் ேநற்று முன்தினம் சென்னை வந்தனர். பின்னர் இயாஸ் அகமது செல்போனில் பதிவாகி இருந்த ஷேக் அசத்துல்லாவின் செல்போன் எண்ணை வைத்து சென்னை மாநகர போலீசார் உதவியுடன்  தீவிரவாதி ஷேக் அசத்துல்லா(35) நீலாங்கரை அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. பிறகு சாதாரண உடையில் போலீசார் ஷேக் அசத்துல்லாவின் புகைப்படத்தை வைத்து பதுங்கி உள்ள நபர் அவர் தானா என்று உறுதி செய்தனர்.

அதை தொடர்ந்து ெசன்னை போலீசார் உதவியுடன் கொல்கத்தா அதிரடி படையினர் நீலாங்கரை அருகே உள்ள துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகர் 1வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஷேக் அசத்துல்லாவை  துப்பாக்கி முனையில் நள்ளிரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். தீவிரவாதி கைது செய்யப்பட்ட தகவலை தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் சென்னை வந்தனர்.பிறகு தீவிரவாதி ஷேக் அசத்துல்லாவை கொல்கத்தா அதிரடி படையினர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  அப்போது, ஜாமத் உல் முஜாகிதீன் ஆப் பங்களாதேஷ் அமைப்பில் வெடி குண்டு தயாரிக்கும் நிபுணர்களில் ஒருவராக செயல்பட்டு வந்துள்ளார். இவன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதி நசீர் ஷேக் உடன் நெருங்கி பழகி வந்ததும்  விசாரணையில் தெரியவந்தது. புத்தகயா குண்டு வெடிப்பு மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் முறைமுகமாகவும் மற்றும் நேரடி தொடர்பு இருந்ததும் உறுதி ெசய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு மேற்கு  வங்கத்தை ேசர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உதவியுடன் கொத்தனார் போல் சென்னையில் பதுங்கியுள்ளார். துரைப்பாக்கத்தில் தங்குவதற்கு முன்பு கிண்டி அருகே உள்ள திருநீர்மலை பகுதியில் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.  கடந்த ஓராண்டில் ஷேக் அசத்துல்லா 3 முறை மேற்கு வங்கத்திற்கு சென்று வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுதவிர ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் முகநூல் வழியாக நேரடியாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
இவருடன் வேறு யாரேனும் தீவிரவாதிகள் சென்னையில் தங்கி உள்ளார்களா என்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அது குறித்து அவன் எதையும் தெரிவிக்கவில்லை என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் தீவிரவாதி ஷேக் அசத்துல்லாவை கொல்கத்தா அதிரடி படையினர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ேநற்று மாலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அதிகாரிகள் ஷேக் அசத்துல்லாவை  கொல்கத்தாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த நீதிமன்றத்தில் ட்ரான்சிட் வாரண்ட் தாக்கல் ெசய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் கொல்கத்தாவுக்கு அழைத்து செல்ல அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து கொல்கத்தா அதிரடி  படையினர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் தீவிரவாதி ஷேக் அசத்துல்லாவை சென்னையில் இருந்து அழைத்து ெசன்றனர். சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கு புத்தகயா வெடி குண்டு வழக்கில் தொடர்பு  உள்ளதால் தனியாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து  சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கிடையே சென்னை போலீசார் தீவிரவாதி பதுங்கி இருந்த துரைப்பாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருநீர்மலை பகுதியில் ஷேக் அசத்துல்லா உடன் தங்கி இருந்த நபர்கள் மற்றும் அவர்  கட்டிட வேலை செய்த பகுதிகளில் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேக் அசத்துல்லா வெடி குண்டு தயாரிப்பதில் நிபுணர் என்பதால் சென்னையில் தங்கிய ஓராண்டு காலத்தில் அடிக்கடி வந்து பார்த்த நபர்கள் யார் யார்? தமிழகத்தில்  ஜாமத் உல் முஜாகிதீன் ஆப் பங்களாதேஷ் அமைப்பை ரகசியமாக செயல்பட்டு வருகிறதா. அந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருடர்கள் என போலீசாரை தீவிரவாதியுடன் அறையில் பூட்டிய மூதாட்டி
சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஷேக் அசத்துல்லா துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகர் 1வது தெருவை சேர்ந்த ரிதீஷ்(40) என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 1ம் தேதி முதல் வசித்து வந்துள்ளார்.தீவிரவாதி ஷேக் அசத்துல்லா கைது குறித்து வீட்டின் உரிமையானர் ராணி கூறியதாவது:கடந்த 1ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வருகிறேன். என் பெயர் ஷேக் அசத்துல்லா என்றும், வீடு வாடகைக்  வேண்டும் என்று கூறினார். அதற்கு நான், நீ எங்க வேலை செய்கிறார் என்று கேட்டேன். அதற்கு அவன், நான்  பெருங்குடியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கொத்தனாராக வேலை செய்து வருவதாகவும், திருநீர்மலையில் இருந்து சரியாக வேலைக்கு வர முடியவில்லை. பெருங்குடி இங்கிருந்து பக்கம் என்பதால் உங்கள் வீட்டை வாடகைக்கு வேண்டும் என்று  கேட்டான். என் வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த 10 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். எல்லோரிடமும் நான் அசல் ஆதார் அட்டையை வாங்கி கொண்டு தான் வீடு வாடகைக்கு விட்டுள்ளேன் என்று கூறினேன். அதற்கு அவன்  பெருங்குடியில் கட்டிட மேஸ்திரியிடம் எனது அசல் ஆதார் அட்டை உள்ளது. வரும் 10ம் தேதி எனக்கு சம்பளம் கொடுப்பார்கள் அன்று நான் வீட்டிற்கான முன் பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் அசல் ஆதார் அட்டையை கொடுப்பதாக கூறினார்.  அதன் பிறகு தான் நான் அவருக்கு வீடு வாடகைக்கு விட்டேன்.

காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து செல்வான். அதோடு இரவு 8 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவான். இவன் தங்கிய நாட்களில் அவனை பார்க்க யாரும் வீட்டிற்கு வரவில்லை. அருகில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களிடமும்  சரியாக பேசாமல் அமைதியாகத்தான் இருப்பான்.நேற்று இரவு 8 மணிக்கு வழக்கம் போல் ஷேக் அசத்துல்லா போன் பேசிக் கொண்டு வீட்டிற்கு வந்தான். அப்போது, அவன் பின்னால் வாட்டசாட்டமாக 8 பேர் திபுதிபுவென ஓடிவந்தனர். ஷேக் அசத்துல்லா  அறைக்குள் புகுந்தனர். அப்போது ஷேக்  அசத்துல்லா காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்று கத்தினார்.  உடனே நான் வீட்டில் இருந்து பூட்டை எடுத்து வந்து ஷேக் அசத்துல்லா அறையை 8 பேருடன் பூட்டிவிட்டேன். பதற்றத்தில் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.
உடனே மற்றொரு 4 பேர் வீட்டிற்கு வந்தனர். என்னை பார்த்து நாங்கள் போலீஸ் என்றும் உள்ேள இருக்கும் தீவிரவாதியை பிடிக்கத்தான் 8 போலீசார் வந்தனர். அவர்களை திறந்துவிடுங்கள் என்று கூறினார். அதன்பிறகு தான் நான் வீட்டின்  பூட்டை திறந்தேன். பின்னர் ஷேக் அசத்துல்லாவை போலீசார் அழைத்து சென்றனர். தீவிரவாதி என்று எங்களுக்கு தெரியாது. தெரிந்து இருந்தால் நான் வீடு வாடகைக்கு விட்டு இருக்க மாட்டேன். இவ்வாறு மூதாட்டி ராணி தெரிவித்தார்.



Tags : Mujahideen militant , 2013 Buddhist, Gaya blast, Mujahideen terrorist ,arrested , gunpoint
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100