×

மீன்வள பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் தேர்வு பட்டியலை வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் ஆர்.சி.செட்டிபட்டியை சேர்ந்த ஏ.கார்த்தி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ெஜயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள அறிவியல், அடிப்படை அறிவியல், மீன்வள பொறியியல் துறைக்கு  உதவி பேராசிரியர்கள் மற்றும் உதவி நூலகர் பணியிடங்களுக்கான  அறிவிப்பை பல்கலைக்கழகம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. அதன்படி, கடந்த ஜூலை 31ம் தேதி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுக்காக விண்ணப்பம் செய்தேன். இந்த பணிக்கான அனைத்து தகுதிகளும் எனக்கு இருக்கிறது. ஆனால்,  என்னை தேர்வு ெசய்வில்லை.

இதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, விதிமுறைகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும். எனக்கு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதியளித்து உத்தரவிட  வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உதவி பேராசிரியர் நியமன நேர்முகத் தேர்வுக்கு (நாளை நடைபெறும்) மனுதாரரை அனுமதிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று  உத்தரவிட்டார். வழக்கு வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 


Tags : University of Fisheries ,professors ,High Court , Assistant Professor, Fisheries University,High Court order
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...