×

அனுமதி பெறாத விளம்பர பேனர்களை தயாரித்தால் பிரின்டிங் உரிமம் ரத்து: மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனர்  பிரகாஷ்  வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான பகுதிகளில் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண்.326யின்படி சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் உரிய அனுமதி பெற்று விளம்பரப் பதாகைகள் மற்றும்  விளம்பரத் தட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.அதனடிப்படையில் அனுமதி பெறுபவர்களின் விளம்பரப் பதாகைகளை அச்சிடும் போதும், அவ்விளம்பரப் பதாகைகளின் கீழ்ப்பகுதியில் அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை, அனுமதி அளிக்கப்பட்ட  அளவின் விவரம், அனுமதிக்கான கால அவகாசம், அச்சகத்தின் பெயர் ஆகியற்றை தமிழ்நாடு அர்பன் லோக்கல் பாடீஸ்(பெர்மிஷன் பார் எரெக்சன் ஆப் டிஜிட்டல் பேனர் அன்ட் பிளேகார்ட்ஸ்)  2011ல் விதி எண்.3(7) தெரிவித்துள்ளதற்கிணங்க,  அனைத்து அச்சகங்களும் அச்சடிக்கும் போது தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என 21.02.2019 அன்று நடைபெற்ற டிஜிட்டல் பேனர் பிரின்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் உயர் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் குறித்த நீதிமன்ற வழக்கு எண்.33819/2018 மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண். 61/2019 ஆகியவற்றில் பல கட்ட விசாரணைகளின் போது டிஜிட்டல்  பேனர் பிரின்டிங் சங்கத்துக்கு நீதியரசர்களால் அறிவுரைகளும் வழங்கப்பட்டு, பின்பற்றப்படாதது குறித்து கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி சென்னை  மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண்.287ன்படி பெருநகர சென்னை மாநகராட்சி தொழில் உரிம விதிகளுக்கு மாறாக, உரிமம் பெறாமல் பதாகைகள் அமைக்கும் நபர்களுக்கு அச்சடிக்கும் பணியினை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம்  ரத்து செய்யப்படுவதுடன், மூடி சீல் வைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Unlicensed ,banners cancel, printing licens,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...